×

ஆளுநரின் ஒப்புதலை தொடர்ந்து பீகாரில் இடஒதுக்கீட்டை 65% ஆக உயர்த்தி அரசிதழில் வெளியீடு: நிதிஷ் அரசு நடவடிக்கை

பாட்னா: பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தள ஆட்சி நடந்து வருகிறது. இந்தியாவின் முதல் மாநிலமாக பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன் விளைவாக, அரசு வேலை மற்றும் கல்வி நிறுவனங்களில் பின்தங்கிய வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை 50 சதவீதத்திலிருந்து 65 சதவீதமாக உயர்த்த அமைச்சரவை அங்கீகரித்தது. அதைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த பீகார் இடஒதுக்கீடு திருத்த மசோதா மற்றும் பீகார் இடஒதுக்கீடு (கல்வி நிறுவனங்களில் சேர்க்கை) திருத்த மசோதா, 2023 ஆகிய இரண்டு மசோதாக்களுக்கும் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கடந்த 17ம் தேதி முறையான ஒப்புதல் வழங்கிய மாநில அரசுக்கு திருப்பி அனுப்பினார். இந்நிலையில், அரசு வேலை, கல்வி நிறுவனங்களில் பின்தங்கிய வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை50 சதவீதத்திலிருந்து 65 சதவீதமாக உயர்த்துவதற்கான அரசிதழ் அறிவிப்பை நிதிஷ் குமார் அரசு நேற்று வெளியிட்டது.

 

The post ஆளுநரின் ஒப்புதலை தொடர்ந்து பீகாரில் இடஒதுக்கீட்டை 65% ஆக உயர்த்தி அரசிதழில் வெளியீடு: நிதிஷ் அரசு நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Bihar ,Governor ,Nitish Govt. Patna ,United Janata Dal government ,Chief Minister ,Nitish Kumar ,India ,Govt ,Dinakaran ,
× RELATED பீகார் மாநிலத்தில் நீட் தேர்வு...